அடிலெய்டில் நேற்று உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததையடுத்து முன்னாள் கேப்டன் இம்ரான் கான் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு கிரிக்கெட் போட்டியை முழுதும் பார்த்த இம்ரான் கான் சமூக வலைத்தளம் மூலம் பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
"பாகிஸ்தான் வீரர்கள் தோல்வியினால் மனம் தளர்ந்து விடவேண்டாம். ஆட்டத்திறனை துல்லியமாக ஆய்வு செய்தால், இந்தத் தோல்வி ஒரு மறைமுக ஆசீர்வாதமே.
நான் போட்டியைப் பார்த்தவரை நிறைய திறன்கள் வெளிப்பட்டன, ஆனால் உத்தி ரீதியாக முன்னேற்றம் தேவை.
பந்துவீச்சைப் பொறுத்தவரை மொகமது இர்பான், வஹாப் ரியாஸ், யாசிர் ஷா ஆகியோர் நன்றாக வீசுகின்றனர். பேட்ஸ்மென்கள் ஒரு நல்ல இலக்கை நிர்ணயித்தால் இந்த பவுலர்கள் நிச்சயம் வெற்றிக்கு இட்டுச் செல்வார்கள். யூனிஸ் கான் அடுத்த போட்டிகளிலும் ஆடுவது அவசியம்.”
இவ்வாறு கூறியுள்ளார் இம்ரான் கான்.