விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: இலங்கை அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 265 ரன் சேர்ப்பு

பாலோ-ஆனை தவிர்க்க போராட்டம்

செய்திப்பிரிவு

கொழும்பு: இந்​தி​யா​வுக்கு எதி​ரான 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் போட்​டி​யில் இலங்கை அணி 8 விக்​கெட்​களை இழந்து பாலோ-ஆனை தவிர்க்க போராடி வரு​கிறது.

கொழும்பு நகரில் உள்ள சிங்​களீஸ் விளை​யாட்டு மைதானத்​தில் நடை​பெற்று வரும் இந்த போட்​டி​யில் டாஸ் வென்று பேட் செய்த இந்​திய அணி 2-வது நாள் ஆட்​டத்​தில் 138 ஓவர்​களில் 9 விக்கெட்கள் இழப்​புக்கு 503 ரன்​கள் குவித்து முதல் இன்னிங்ஸைடிக்​ளேர் செய்​தது. அதி​கபட்​ச​மாக தேவ்​தத் படிக்​கல் 117, துருவ் ஜூரெல் 115, ரிஷப் பந்த் 63 ஷுப்​மன் கில் 50 ரன்​கள் சேர்த்​தனர்.

இதையடுத்து விளை​யாடிய இலங்கை அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடி​வில் 3 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 8 ரன்கள் எடுத்​தது. லகிரு குமாரா 1, பிர​பாத் ஜெயசூரியா 2 ரன்களில் ஆட்​ட​மிழந்​தனர். கமில் மிஷாரா 5 ரன்​களு​டன் ஆட்டமிழக்​காமல் இருந்​தார். நேற்று 3-வது நாள் ஆட்​டத்தை இலங்கை அணி தொடர்ந்து விளை​யாடியது. கமில் மிஷா​ரா​வுடன் பசிந்து சூரியபண்​டாரா களமிறங்​கி​னார்.

கமில் மிஷாரா 25 பந்​துகளில், 3 பவுண்​டரி​களு​டன் 19 ரன்​கள் எடுத்த நிலை​யில் பிரசித் கிருஷ்ணா பந்​தில், விக்​கெட் கீப்​பர் துருவ் ஜூரெலிடம் பிடி​கொடுத்து வெளி​யேறி​னார். 35 ரன்​களுக்கு 3 விக்​கெட்​களை இழந்த நிலை​யில் களமிறங்​கிய கமிந்து மெண்டிஸ், பசிந்து சூரியபண்​டா​ரா​வுடன் இணைந்து பார்ட்​னர்​ஷிப்பை கட்​டமைக்க முயன்​றார். 4-வது விக்​கெட்​டுக்கு 87 ரன்​கள் சேர்த்த இந்த ஜோடியை பிரசித் கிருஷ்ணா பிரித்​தார்.

கமிந்து மெண்​டிஸ் 58 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 3 பவுண்டரிகளுடன் 32 ரன்​கள் எடுத்த நிலை​யில் பிரசித் கிருஷ்ணா பந்​து​வீச்​சில் மிட்விக்​கெட் திசை​யில் ரவீந்​திர ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இதையடுத்து களமிறங்​கிய கேப்​டன் தனஞ்​ஜெயா டி சில்வா 14 பந்​துகளில், 2 பவுண்​டரி​களு​டன் 8 ரன்​கள் எடுத்த நிலை​யில் மானவ் சுதார் சுழலில், சிலிப் திசை​யில் நின்ற கே.எல்​.​ராகுலிடம் பிடி​கொடுத்து ஆட்​ட​மிழந்​தார். இதன் பின்​னர் சோனல் தினுஷா களமிறங்​கி​னார். தனது முதல் அரை சதத்தை கடந்த பசிந்து சூரியபண்​டாரா 133 பந்​துகளில், 9 பவுண்​டரி​களு​டன் 80 ரன்​கள் விளாசிய நிலை​யில் ஜடேஜா பந்​தில் போல்​டா​னார்.

இதைத் தொடர்ந்து களமிறங்​கிய நிரோஷன் டிக்​வெல்லா ரன் ஏதும் எடுக்​காத நிலை​யில் முகமது சிராஜ் பந்​தில், துருவ் ஜூரெலிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்​டி​னார். 8-வது விக்​கெட்​டுக்கு களமிறங்​கிய கேஷரா நுவந்தா தடுப்​பாட்​டத்​தில் கவனம் செலுத்த சோனல் தினுஷா மட்​டையை சுழற்​றி​னார். சோனல் தினுஷா 82 பந்​துகளில், 3 பவுண்​டரி​கள், 2 சிக்​ஸர்​களு​டன் தனது 3-வது அரை சதத்தை கடந்​தார்.

நிதான​மாக விளை​யாடிய கேஷரா நுவந்தா 74 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 2 பவுண்​டரி​களு​டன் 18 ரன்​கள் எடுத்த நிலை​யில் மானவ் சுதார் பந்​தில் மிட் ஆஃப் திசை​யில் நின்ற சரண்ஷ் ஜெயினிடம் பிடி​கொடுத்து வெளி​யேறி​னார். இந்த ஜோடி 8-வது விக்​கெட்​டுக்கு 57 ரன்​கள் சேர்த்​தது. இலங்கை அணி 83.4 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 265 ரன்​கள் எடுத்​திருந்த போது மழை காரண​மாக ஆட்​டம் நிறுத்​தப்​பட்​டது.

தொடர்ந்து மழை பெய்​த​தால் 3-வது நாள் ஆட்​டம் அத்​துடன் முடித்​துக்​கொள்​ளப்​பட்​டது. சோனல் தினுஷா 136 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 6 பவுண்​டரி​களு​டன் 85 ரன்​களும், லகிரு குமாரா 50 பந்​துகளில், ஒரு பவுண்​டரி​யுடன் 8 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். இந்த ஜோடி 9-வது விக்​கெட்​டுக்கு 65 நிமிடங்​களை செல​விட்டு 50 பந்​துகளில் 35 ரன்​கள் சேர்த்​துள்​ளது.

இந்​திய அணி தரப்​பில் பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதார் ஆகியோர் தலா 3 விக்​கெட்​களை வீழ்த்​தினர். முகமது சிராஜ், ரவீந்​திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர். 238 ரன்​கள் பின்​தங்கி உள்ள இலங்கை அணி பாலோ-ஆனை தவிர்க்க மேற்​கொண்டு 38 ரன்​கள் சேர்க்க வேண்​டும் என்ற நிலை​யில்​ இன்று 4-வது நாள்​ ஆட்​டத்​தை எ​திர்​கொள்​கிறது.

SCROLL FOR NEXT