விளையாட்டு

உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி இன்று தேர்வு

பிடிஐ

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி இன்று தேர்வு செய்யப்படுகிறது. இதனோடு சேர்த்து, ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முத்தரப்பு போட்டிக்கான இந்திய அணியும் இன்று அறிவிக்கப்படவுள்ளது.

உலகக்கோப்பைப் போட்டிக்கான இந்திய அணிக்கு 8 பேட்ஸ்மேன்கள், 7 பவுலர்கள் கொண்ட அணியை தேர்வுக்குழு தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தேச அணியில் சேவாக், யுவராஜ் சிங், கம்பீர், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங் ஆகியோர் இடம்பெறவில்லை. இதனால் உலகக்கோப்பை அணியில் அவர்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.

இந்திய அணியின் 8 பேட்ஸ்மேன்களாக தோனி, ஷிகர் தவன், ரோஹித் சர்மா, விராட் கோலி, ரெய்னா, ரஹானே, ராயுடு, உத்தப்பா ஆகியோரும் 7 பவுலர்களாக இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், முகமது சமி, உமேஷ் யாதவ், அஸ்வின், ஜடேஜா, அக் ஷர் படேல் ஆகியோரும் இடம்பெற வாய்ப்புண்டு.

இதுதவிர முரளி விஜய், வருண் ஆரோன், கரண் சர்மா, ஸ்டூவர்ட் பின்னி, மோஹித் சர்மா ஆகிய வீரர்களும் நம்பிக்கையோடு உள்ளார்கள். வருண் ஆரோன் டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசாததால் அவருக்கு வாய்ப்புகள் குறைவாக உள்ளன. ஸ்டூவர்ட் பின்னி ஆல்ரவுண்டர் என்பதால் அவருக்கு அதிக வாய்ப்புண்டு.

SCROLL FOR NEXT