விளையாட்டு

பத்மபூஷண் விருதுப் பரிந்துரையில் என் பெயர் இல்லை: சாய்னா வருத்தம்

செய்திப்பிரிவு

பத்மபூஷண் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் தன் பெயர் இல்லாதது குறித்து பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றுள்ள சாய்னா நேவாலுக்கு பத்ம பூஷன் விருது வழங்க வேண்டும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு, இந்திய பேட்மிண்டன் சங்கம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பரிந்துரை செய்தது. ஆனால், சாய்னா பெயரை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் நிராகரித்திருக்கிறது.

இது குறித்து சாய்னா பேசுகையில், ''2010ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வென்ற பிறகு, பத்ம பூஷண் விருதுக்காக கடந்த ஆண்டு விண்ணப்பித்தேன். பத்ம ஸ்ரீ விருது பெற்று 5 ஆண்டுகள் நிறைவடையவில்லை என்ற காரணத்தைக்கூறி, அடுத்த ஆண்டு விண்ணப்பிக்கும்படி விளையாட்டு அமைச்சகம் கூறியது.

ஆனால், 2011-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார் பெயரை பத்ம பூஷண் விருதுக்குப் பரிந்துரை செய்துள்ளது. அப்படி இருக்கையில், விளையாட்டுத் துறை அமைச்சகம் என் பெயரைப் பரிந்துரை செய்யாதது வருத்தம் அளிக்கிறது'' என்று சாய்னா நேவால் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT