விளையாட்டு

மும்பை அணியில் மீண்டும் பாண்டிங்

செய்திப்பிரிவு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் மும்பை இண்டியன்ஸ் அணியில் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் மீண்டும் இணைந்துள்ளார். கடந்த சீசனில் அந்த அணிக்காக விளையாடிய அவர், இந்த சீசனில் ஆலோசகராக இடம்பெற்றுள்ளார்.

நவீன காலத்தின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படும் பாண்டிங், இது தொடர்பாக கூறுகையில், “மும்பை அணியுடன் இணைந்து மீண்டும் செயல்படுவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். கடந்த சீசன் எனக்கு மிகச்சிறந்த ஒன்றாக அமைந்தது” என்றார்.

SCROLL FOR NEXT