ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முன்னாள் கேப்டன் திராவிட் முதலிடத்தில் உள்ளார். அவரது சாதனையை முறியடிக்க இப்போதைய கேப்டன் விராட் கோலிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
2003–04 ஆண்டு நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் திராவிட் 619 ரன் குவித்தார். இப்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இதுவரை விராட் கோலி 499 ரன் எடுத்து உள்ளார். இன்னும் ஒரு டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது.
திராவிட்டின் சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் 121 ரன் தேவை. இந்த தொடரில் சிறப்பாக விளையாடி இதுவரை 499 ரன்களை கோலி எடுத்துள்ளார். எனவே அவர் திராவிட்டின் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தொடரில் கோலி 3 சதம், ஒரு அரை சதம் எடுத்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் முரளி விஜய் (402 ரன்) இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் குண்டப்பா விஸ்வநாத் 518 ரன்களுடன் 2-வது இடத்திலும், வி.வி.எஸ்.லட்சுமண் 503 ரன்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.