விளையாட்டு

மாநில கால்பந்து போட்டி சென்னை அணி சாம்பியன்

செய்திப்பிரிவு

திண்டுக்கல்லில் நேற்று நடந்த மாநில அளவிலான முன்னாள் வீரர்களுக்கான கால்பந்து போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றது.

திண்டுக்கல் கால்பந்து கழகம், பட்டுமணி வெட்ரன்ஸ் கால்பந்துக் குழு மற்றும் யுனைடெட் வெட்ரன்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 40 வயதுக்கு மேற்பட்ட முன்னாள் கால்பந்து வீரர்கள் பங்கேற்ற இந்தப் போட்டி நேற்று முன்தினம் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது. நேற்று நடந்த போட்டிகளில் சென்னை, திண்டுக்கல் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றன.

இறுதிப் போட்டியை மாவட்ட கால்பந்தாட்ட கழகத் தலைவர் ஜி.சுந்தர்ராஜன் தொடங்கி வைத்தார். இதில் 4:0 என்ற கோல் கணக்கில் வென்ற சென்னை அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இந்த அணிக்கு மாவட்ட காவல்துறை ஏ.டி.எஸ்.பி., சீனிவாசன், கால்பந்து கழகச் செயலாளர் சண்முகம், துணைத் தலைவர் சங்கரலிங்கம், பங்குத் தந்தை மரியநாதன் பரிசுகளை வழங்கினர்.

SCROLL FOR NEXT