உலகக் கோப்பைக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிரடி ஆல்ரவுண்டர்கள் கெய்ரன் பொலார்டு மற்றும் டிவைன் பிராவோ தேர்வு செய்யப்படாதது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜெசன் ஹோல்டர் நியமிக்கப்பட்டதும், கடும் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. மர்லன் சாமுயெல்ஸ் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், டேரன் பிராவோ, சுனில் நரைன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் கிமார் ரோச் தேர்வு செய்யப்பட்டுள்ளதும் பலருக்கும் ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
15 வீரர்கள் கொண்ட மே.இ.தீவுகள் அணி வருமாறு:
ஜேசன் ஹோல்டர் (கேப்டன்)
மர்லன் சாமுயெல்ஸ் (துணை கேப்டன்)
சுலைமான் பென்
டேரன் பிராவோ
ஜொனாதன் கார்ட்டர்
ஷெல்டன் காட்ரல்
கிறிஸ் கெயில்
சுனில் நரைன்
தினேஷ் ராம்தின் (விக்.கீப்பர்)
கிமார் ரோச்
ஆந்த்ரே ரசல்
டேரன் சமி
லெண்டில் சிம்மன்ஸ்
டிவைன் ஸ்மித்
ஜெரோம் டெய்லர்