ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்கான பரிசுத் தொகை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பரிசுத் தொகை ரூ.250 கோடிக்கு மேல் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் வரும் 19-ம் தேதி முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக முன்னணி வீரர், வீராங்கனைகள் அனைவரும் ஆஸ்திரேலியா வந்துள்ளனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்கான பரிசுத் தொகையை போட்டி ஏற்பாட்டாளர்கள் அதிகரித்துள்ளனர். இதன்படி ஒட்டுமொத்த பரிசுத் தொகை ரூ.250 கோடிக்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது. சாம்பியன் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு முறையே ரூ.20 கோடி பரிசுத் தொகை கிடைக்கும். முதல் சுற்றில் தோல்வியடைபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.22 லட்சம் கிடைக்கும்.
ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்கான பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஒட்டுமொத்த பரிசுத் தொகை ரூ.210 கோடியாக இருந்தது. இப்போது சுமார் 40 கோடிக்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது.