விளையாட்டு

வெல்ல வேண்டிய கட்டாயத்தில் ஆஸி.யை இன்று சந்திக்கிறது இந்தியா

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுடனான முத்தரப்பு தொடரில் இன்று ஆஸ்திரேலியாவைச் சந்திக்கிறது இந்தியா. ஏற்கெனவே 2 போட்டிகளிலும் தோற்றுள்ள நிலையில் இப்போட்டி இந்தியாவுக்கு மிக முக்கியமானது.

இன்றைய போட்டியில் தோற்றுவிட்டால், இங்கிலாந்தை மிகப்பெரும் வித்தியாசத்தில் கூடுதல் போனஸ் புள்ளிகளுடன் வெல்ல வேண்டும். அதிலும், இங்கிலாந்தை விட அதிக நெட் ரன்ரேட் தேவைப்படும். எனவே, இன்றைய போட்டியிலும் வென்று, இங்கிலாந்தையும் வீழ்த்தினால் இறுதிப் போட்டிக்கு எளிதில் முன்னேறலாம்.

இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளதால், ஆஸ்திரேலியா தன் முக்கிய வீரர்களுக்கு ஓய்வளித்து விட்டு ஏதேனும் பரிசோதனை முயற்சியில் ஈடுபடக்கூடும். இது இந்தியாவுக்குச் சாதமாக அமையலாம். ஆனால், இந்தப் பருவத்தில் ஆஸ்திரேலியா ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும்.

SCROLL FOR NEXT