விளையாட்டு

தென் மண்டல போட்டிகள்

செய்திப்பிரிவு

பல்கலைக்கழக வாலிபால்

சென்னை பல்கலைக்கழக உடற்கல்வி மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிர் வாலிபால் போட்டி துரைப்பாக்கம் டி.பி.ஜெயின் கல்லூரியில் வரும் 26-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில் தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 72 பல்கலைக்கழகங்களின் சார்பில் 1000 வீராங்கனைகள் கலந்துகொள்கிறார்கள்.

பல்கலைக்கழக கபடி போட்டி

தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆடவர் கபடிப் போட்டி சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்குகிறது. 24-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் 76 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் என்.ராமச்சந்திரன் போட்டியை தொடங்கி வைக்கிறார்.

SCROLL FOR NEXT