விளையாட்டு

சிவ்லால் யாதவ் தலைமையில் பிசிசிஐ அவசர கூட்டம்

செய்திப்பிரிவு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) அவசர செயற்குழு கூட்டம் சிவ்லால் யாதவ் தலைமையில் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

ஐபிஎல் தவிர பிசிசிஐ-யின் பிற விவகாரங்களை கவனித்துக் கொள்ளும் இடைக்கால தலைவராக முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான சிவ்லால் யாதவ், உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார்.

இது தொடர்பாக சிவ்லால் யாதவ் கூறியது: எனது தலைமையில் பிசிசிஐ-யின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு சுநீல் காவஸ்கர் இப்போது துபாயில் உள்ளார். எனவே அவர் இந்த கூட்டத்தில் பங்கேற்பாரா என்பது எனக்குத் தெரியாது.

ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பிசிசிஐ-யின் அடுத்த கட்ட அணுகுமுறை குறித்து கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. பிசிசிஐ இடைக்கால தலைவராக சுநீல் காவஸ்கரையும் உச்ச நீதிமன்றம் நியமித்தது. அவர் ஐபிஎல் போட்டிகள் தொடர்பான விஷயங்களை மட்டும் கவனித்துக் கொள்கிறார்.

SCROLL FOR NEXT