விளையாட்டு

‘அஜ்மல் விலகலால் பாகிஸ்தானுக்கு பாதிப்பு’

பிடிஐ

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் விலகியிருப்பது பாகிஸ்தான் அணிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று முன்னாள் வீரர்சோயிப் அக்தர் கூறியுள்ளார். பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் பிப்ரவரியில் தொடங்கும் உலகக்கோப்பையிலிருந்து விலகியுள்ளார்.

இதுபற்றி சோயிப் அக்தர் கூறும்போது, “முழங்கையில் உள்ள குறைபாடு காரணமாக அஜ்மலால் விதிமுறைக்கு உட்பட்டு பந்துவீச முடியவில்லை. அஜ்மல் உலகக்கோப்பையில் கலந்துகொள்ள முடியாத காரணத்தால் பாகிஸ்தான் அணிக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படும்” என்றார்.

SCROLL FOR NEXT