விளையாட்டு

ஆஸி.க்கு எதிரான திராவிட் சாதனையை குறிவைக்கும் கோலி

ஐஏஎன்எஸ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நடப்பு தொடரில் விராட் கோலி 3 சதங்களுடன் 499 ரன்களை எடுத்துள்ளார். இன்னும் ஒரு டெஸ்ட் போட்டி மீதமுள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரில் அதிகபட்ச ரன்களை எடுத்துள்ள் ராகுல் திராவிட் சாதனைக்கு அருகில் இருக்கிறார் விராட் கோலி.

2003/04-இல் கங்குலி தலைமையில் சென்ற இந்திய அணி தொடரை 1-1 என்று டிரா செய்தது. அதில் இந்தியா அடிலெய்டில் வெற்றி பெற்றது. அதற்கு பிரதான காரணம் திராவிட் முதல் இன்னிங்ஸில் 233 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 73 ரன்களையும் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார்.

இதனையடுத்து அந்தத் தொடரில் அவர் 619 ரன்களை எடுத்திருந்தார். இதுவே ஆஸி.க்கு எதிராக இந்திய வீரர் ஒருவர் ஒரு தொடரில் எடுத்த அதிகபட்ச ரன்கள் ஆகும்.

தற்போது விராட் கோலி 499 ரன்கள் எடுத்துள்ளார். சிட்னியில் 6ஆம் தேதி தொடங்கும் இறுதி டெஸ்ட் போட்டியில் விராட் மேலும் 121 ரன்களை எடுத்தால் திராவிட் சாதனையை முறியடிப்பார்.

ராகுல் திராவிடிற்கு அடுத்த படியாக 1979 டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக குண்டப்பா விஸ்வநாத் 518 ரன்களையும், விவிஎஸ். லஷ்மண் 2001 தொடரில் 503 ரன்களையும் ஆஸி.க்கு எதிராக எடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT