பிலிப் ஹியூஸ் மீது மிகுந்த அன்பு செலுத்திய ஆஸ்திரேலிய மக்கள் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு ஹியூஸின் குடும்பம் நன்றி தெரிவித்துள்ளது.
ஹியூஸின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்தியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஹியூஸ் குடும்பத்தினர் ஊட கங்களில் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: ஹியூஸ் மரணத்தினால் ஏற்பட்ட வருத்தத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்தமுடியவில்லை. ஆனால் இந்தக் கடினமான நேரத்தில் அனைவரும் தெரிவித்த அன்பு எங்களுக்குப் பலத்தைத் தருகிறது.
நண்பர்கள், உறவினர்கள், மேக்ஸ்வில்லே மக்கள், கிரிக்கெட் வீரர்கள், சிட்னி வின்சென்ட் மருத்துவமனை என அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்று அறிக்கையில் கூறியுள்ளனர்.