விளையாட்டு

உலக சூப்பர் சீரிஸ் அரையிறுதியில் சாய்னா

செய்திப்பிரிவு

துபாயில் நடைபெற்று வரும் உலக சூப்பர் சீரிஸ் பைனல் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால்அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். நேற்று நடைபெற்ற தனது கடைசி லீக் ஆட்டத்தில் 15-21, 21-7, 21-17 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் பே இயோன் ஜூவை வீழ்த்தியதன் மூலம் அரையிறுதியை உறுதி செய்தார் சாய்னா.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 15-21 என்ற கணக்கில் இழந்த சாய்னா, அடுத்த செட்டில் அதிரடியாக ஆடி ஆரம்பத்திலேயே 6-2 என முன்னிலை பெற்றார். இதன்பிறகு அந்த செட்டை 21-7 என கைப்பற்றினார் சாய்னா. அடுத்த செட்டில் இயோன் போராடியபோதும், அவரது ஆட்டம் சாய்னாவிடம் எடுபடவில்லை.

SCROLL FOR NEXT