# ஐபிடிஎல் டென்னிஸ் லீக் மிகப்பெரிய வெற்றி அடைந்துள் ளதாக மகேஷ் பூபதி அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது: மணிலாவில் நடைபெற்ற முதல் சுற்றில் ரசிகர்கள் அதிக ஆதரவு தந்தார்கள். இந்தப் போட்டியை அடுத்த 25,30 வருடங்களுக்கு கொண்டு செல்ல விரும்புவதால் இந்த தொடக்கத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொள்வோம். இந்தப் போட்டி புதிய வடிவமைப்பு கொண்டது. இது கொஞ்சம் ஆபத்தானது. ஆனால் ரசிகர்களின் வரவேற்பு எங்களுடைய திட்டங்களை வெற்றியடைய செய்துவிட்டது என்றார்.
# இந்தியாவின் மிகப்பெரிய டயர் உற்பத்தி நிறுவனமான எம்ஆர்எஃப் 2015-ம் ஆண்டு ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியின் முக்கிய ஸ்பான்சர்களில் ஒன்றாக இணைந்துள்ளது.