தோள்பட்டை காயம் காரணமாக இந்தியா திரும்பும் ஆல்ரவுண்கர் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக வளர்ந்து வரும் ஆல்ரவுண்டர் அக்ஷர் படேல் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அக்ஷர் படேல் குஜராத்தைச் சேர்ந்த இடது கை பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஆவார். ஐபிஎல் கிரிக்கெட்டில் இவரது ஆட்டம் பலரையும் வியக்க வைத்ததால் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்பட்டார்.
வங்கதேசத்திற்கு எதிராக ஜூன் மாதம் இவர் இந்திய அணியில் அறிமுகமானார். இதுவரை 9 ஒருநாள் போட்டிகளில் 14 விக்கெட்டுகளை 20.28 என்ற சராசரியில் எடுத்துள்ளார். சிக்கன விகிதம் ஓவருக்கு 4.49 ரன்கள் என்ற ஆரோக்கியமான விகிதத்தில் உள்ளது.
ரஞ்சி கிரிக்கெட்டில் இவர் இதுவரை 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சவுராஷ்டிராவுக்கு எதிராக 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.