விளையாட்டு

தமிழில் வெளியாகிறது சச்சின் சுயசரிதை

ஐஏஎன்எஸ்

சச்சினின் சுயசரிதை நூலான ‘பிளேயிங் இட் மை வே’, தமிழ் உள்ளிட்ட எட்டு இந்திய மொழிகளில் வெளியிடப்படுகிறது.

சச்சினின் வாழ்க்கை வரலாறு, ‘பிளேயிங் இட் மை வே’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் கடந்த மாதம் வெளியானது. ஹாச்செட் இந்தியா நிறுவனம் இந்த நூலைப் பதிப்பித்தது. இப்போது இந்த நூல் தமிழ் உள்ளிட்ட எட்டு இந்திய மொழிகளில் வெளிவரவுள்ளது. முதலில் மராத்தியில் மேத்தா பதிப்பு நிறுவனம் மூலம் வெளியாகிறது.

ஹாச்செட் இந்தியாவின் செயல் நிர்வாக இயக்குநர் ஆப்ரகாம் இதுபற்றி கூறும்போது: ‘பிளேயிங் இட் மை வே’ முதலில் 1,02,000 பிரதிகள் அச்சடிக்கப்பட்டன. ஆனால் ஆர்டர்கள் 2 லட்சத்துக்கும் அதிகமாக வந்தன. இந்த நூல் ஹிந்தி, மராத்தி, தமிழ், மலையாளம், வங்காளம், அஸ்ஸாமி, தெலுங்கு, குஜராத்தி ஆகிய எட்டு இந்திய மொழிகளில் அடுத்த வருட ஜூலை மாதத்துக்குள் வெளியிடப்படும் என்றார்.

மேத்தா பதிப்பகத்தை சேர்ந்த அனில் மேத்தா கூறும்போது: மராத்தி மொழிபெயர்ப்பு 2015 மார்ச்சில் வெளியாகும். ஆரம்பத்தில் 50,000 பிரதிகள் விற்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

SCROLL FOR NEXT