விளையாட்டு

உளவியல் ரீதியாக அச்சுறுத்த வேண்டும் : மிட்செல் ஜான்சன்

பிடிஐ

எதிரணியை அச்சுறுத்த உளவியல் ரீதியான போர்முறை அவசியமானது என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் கூறியுள்ளார்.

‘மிட்சல் ஜான்சன்: பவுன்சிங் பேக்’ என்கிற புதிய டிவிடியில் வேகப்பந்து வீச்சின் உத்திகள் பற்றி ஜான்சன் விளக்கியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: சிலநேரங்களில் ஆடுகளங்களில் மோசமாகப் பேசிவிடுகிறோம். சிலநேரங்களில் நாம் பேசுவது பேட்ஸ்மேனிடம் சிறிது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர்களுடைய கால்நகர்த்தல்களைப் பற்றி யோசிக்கவைக்கிறோம், அல்லது ஷார்ட் பந்து வீசுவதை அவர்கள் அறியும்படி செய்கிறோம். இவை எல்லாமே மனஉறுதியை தீர்மானிக்கும் விளையாட்டு.

சிலநேரங்களில் தொலைக்காட்சியில் பார்க்கும்போது ஒருவருக்கொருவர் கடுமையாக மோதிக்கொள்வதுபோல தோன்றும். ஆனால் நாங்கள் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டே இருக்க விரும்புகிறோம். சிலநேரம், பேட்ஸ்மேனிடம், உன் கால்கள் எங்கும் நகரவில்லை என்று கூறுவதன் மூலம் அதைப் பற்றி யோசிக்க வைக்கமுடியும். பிறகு அவர்களை நோக்கி பவுன்சர் வீசுங்கள். அப்போது அவர் உங்களைப் பற்றித்தான் நினைப்பார்கள். இந்த விளையாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். இது ஒருபோதும் நிற்காது என்று எண்ணுகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT