விளையாட்டு

இந்தியர்களை நாங்கள் வெறுப்பேற்றத் தேவையில்லை – ஸ்மித்

செய்திப்பிரிவு

கடந்த இரண்டு டெஸ்டுகளிலும் இரு அணிகளிலும் சில வீரர்கள் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். அந்த அணுகு முறை மூன்றாவது டெஸ்டிலும் தொடருமா என்ற கேள்விக்கு பதிலளித்த ஆஸி. கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்,

“இந்தியர்களை நாங்கள் வெறுப்பேற்றத் தேவையில்லை. அவர்களே தங்களை வெறுப்பேற்றிக் கொள்கிறார்கள். அவர்கள் தவறையும் செய்துவிட்டு புகாரும் கூறுகிறார்கள். இந்த டெஸ்டில் அதுவே அவர்களுக்கு இடையூறாக இருக்கும் என்று நம்புகிறேன்.

டெஸ்ட் தொடரை 4-0 என வெல்வது சுகமானதுதான் என்றாலும் இப்போது இந்த டெஸ்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். பாக்ஸிங் டே டெஸ்டில் ஆடுவது மட்டுமில்லாமல் அணிக்குத் தலைமையேற்பதும் அற்புதமான அனுபவம்” என்றார்.

SCROLL FOR NEXT