விளையாட்டு

மக்காவ் ஓபன்: சிந்து மீண்டும் சாம்பியன்

செய்திப்பிரிவு

மக்காவ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தனது சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்தார்.

மக்காவ் நகரில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான சிந்துவுடன் தென் கொரியாவின் கிம் ஹையோ மின் மோதினார்.

ஆரம்பம் முதலே இந்தச் சுற்றில் ஆதிக்கம் செலுத்திய சிந்து, 21-12, 21-17 என்ற நேர் செட்களில் ஹையோ மினை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

முன்னதாக, ஆடவர் அரையிறுதியில் எச்.எஸ்.பிரணாய் 16-21, 21-16, 12-21 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் விங் கி வாங்கிடம் தோல்வி கண்டார்.

SCROLL FOR NEXT