விளையாட்டு

சரிதா தேவி மீதான தடையை நீக்க மத்திய அரசு கோரிக்கை

செய்திப்பிரிவு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் நடுவர் பாரபட்சமாக செயல்பட்டதாகக் கூறி பதக்கத்தை வாங்க மறுத்த இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவிக்கு சர்வதேச குத்துச்சண்டை சங்கம் (ஏஐபிஏ) தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் சரிதா தேவி மீதான தடையை நீக்குவது குறித்து பரிசீலிக்குமாறு ஏஐபிஏவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சோனோவால் தெரிவித்துள்ளார். அதில், ‘ஏழ்மையான பின்னணியைக் கொண்ட சரிதா தேவி, தனது கடுமையான உழைப்பு, விடாமுயற்சி மற்றும் திறமையால் இந்தளவுக்கு உயர்ந்துள்ளார்.

சரிதா தேவி மீதான தடை, அவரை முன்மாதிரியாகக் கொண்டு வளரும் வீரர்களை நம்பிக்கை இழக்கச் செய்வதாக அமையும். மேற்கண்ட காரணங்களை மனதில் கொண்டு அவர் மீதான தடையை நீக்குவது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT