விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து: கேரளா-மும்பை ஆட்டம் டிரா

செய்திப்பிரிவு

கேரள மாநிலம் கொச்சியில் நேற்று நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ்-மும்பை சிட்டி அணிகள் இடையிலான ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.

41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்தப் போட்டியை பார்க்க மைதானத்திற்கு வந்திருந்தனர். ஆனால் இரு அணிகளுமே கோலடிக்காதது அவர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இதேபோல் மஞ்சள் அட்டை, சிவப்பு அட்டை உள்ளிட்ட எதையும் நடுவர் பயன்படுத்தாத அளவுக்கு ஆட்டம் அழகாக அமைந்தது.

மும்பை அணி 8 ஆட்டங்களில் விளையாடி 11 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், கேரளா 8 ஆட்டங்களில் விளையாடி 9 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளன. டெல்லியில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் அணியும், கோவா எப்.சி. அணியும் மோதுகின்றன.

SCROLL FOR NEXT