விளையாட்டு

சரிதா தேவிக்கு தடை கடுமையாகவே வாய்ப்பு: உலகக் குத்துச்சண்டை கூட்டமைப்பு

பிடிஐ

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தை ஏற்க மறுத்த இந்திய குத்துச் சண்டை வீராங்கனை சரிதா தேவி மீது விதிக்கப்பட்ட தடையை மேலும் கடுமையாக்கவே வாய்ப்புள்ளது என்று உலக குத்துச் சண்டை கூட்டமைப்பு அதிரடியாக தெரிவித்துள்ளது.

உலகக் குத்துச் சண்டை கூட்டமைப்பின் தலைவர் வூ சிங்-குவோ இது பற்றி கூறும்போது, “சரிதா தேவிக்கு தண்டனை இன்னும் கடுமையாகவே வாய்ப்புள்ளது. நடத்தை தொடர்பான மீறல்கள் ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாதது.

வெற்றி பெற்றவர் என்பதை அறிவிக்கும் போது ஏற்றுக் கொள்ளும்போது, தோல்வியையும் ஒப்புக் கொள்ள வேண்டும். அனைவரும் இவரைப்போல் நடந்து கொள்ளத் தொடங்கினால் நாம் எந்த மாதிரியான தொடரை நடத்த முடியும்?

நான் அவர்களிடம் (இந்திய குத்துச் சண்டை அமைப்பிடம்) தெரிவித்து விட்டேன், மன்னிப்பு கடினம்தான் என்று. ஒரு செயலைச் செய்வதற்கு முன்பு யோசித்துச் செயல்படவேண்டும்.

சரிதா தேவியை சில காலத்திற்கு தடை நீடிக்கவே செய்யும். அனைத்து நடுவர்களின் தீர்ப்புகளும் மதிக்கப்பட வேண்டியதை நாங்கள் உறுதி செய்தாக வேண்டும்” என்றார்.

60 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை சரிதா தேவிக்கு எதிராக அநீதி இழைக்கப்பட்டது. தென் கொரிய வீராங்கனை ஜினா பார்க் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பதக்கமளிப்பு மேடையில் வெண்கலப்பதக்கத்தை சரிதா தேவி ஏற்க மறுத்தார். இதனையடுத்து அவருக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்தத் தடையை கைவிடுமாறு இந்தியக் குத்துச் சண்டை அமைப்பு கோரிக்கை வைத்தது. ஆனாலும் அதற்கு உலகக் குத்துச்சண்டை அமைப்பு செவிசாய்க்கவில்லை.

SCROLL FOR NEXT