சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் அதிக கோலடித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்ஸி. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்பெயின் லீக்கில் அதிக கோலடித்தவர் என்ற சாதனையைப் படைத்த மெஸ்ஸி, இப்போது அடுத்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.
சைப்ரஸின் நிகோஸியா நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் மெஸ்ஸி தலைமையிலான பார்சிலோனா அணியும், ஏபோல் நிகோஸியா அணியும் மோதின. இந்த ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில் கோலடித்த மெஸ்ஸி 72 கோல்களுடன் சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் அதிக கோலடித்தவர் என்ற சாதனையைப் படைத்தார்.
முன்னதாக ஸ்பெயினின் ராவ்ல் 71 கோல்கள் (142 ஆட்டங்கள்) அடித்ததே சாதனையாக இருந்தது.