விளையாட்டு

வங்கதேசம்-303/2

செய்திப்பிரிவு

ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் குவித்துள்ளது.

சிட்டகாங்கில் நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேச அணியில் தமிம் இக்பால்-இம்ருள் கெய்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 63.5 ஓவர்களில் 224 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் இந்த ஜோடி டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த வங்கதேச ஜோடி என்ற பெருமையைப் பெற்றது.

டெஸ்ட் போட்டியில் 6-வது சதமடித்ததன் மூலம் அதிக டெஸ்ட் சதங்கள் கண்ட வங்கதேச வீரர் என்ற முகமது அஷ்ரபுலின் சாதனையை சமன் செய்த தமிம் இக்பால் 109 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான இம்ருள் கெய்ஸ் 130 ரன்கள் சேர்த்து வெளியேறினார். மோமினுல் ஹக் 46, மகமதுல்லா 5 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

SCROLL FOR NEXT