ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் மெர்ஸிடஸ் டிரைவர் லீவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார்.
அபுதாபியில் நேற்று நடைபெற்ற கடைசிச் சுற்றில் முதலிடத்தைப் பிடித்ததன் மூலம் 384 புள்ளிகளுடன் சாம்பியன் ஆனார் ஹாமில்டன். இந்த சீசனில் மட்டும் 11 முறை முதலிடத்தைப் பிடித்த ஹாமில்டன், ஃபார்முலா 1 போட்டியில் 2-வது முறையாக சாம்பியனாகியுள்ளார். இதற்கு முன்னர் 2008-ல் அவர் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக ஹாமில்டனுடன் கடும் போட்டியிலிருந்த மெர்ஸிட ஸின் மற்றொரு டிரைவர் நிகோ ரோஸ்பெர்க்கின் காரில் இஞ்ஜின் பழுதானதால் அவரால் 14-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.