விளையாட்டு

சாதனையை நோக்கி ரோஜர் பெடரர்: 8வது முறையாக விம்பிள்டன் பட்டத்தை கைபற்றுவாரா?

ஏஎஃப்பி

விம்பிள்டன் போட்டியின்ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் 11-வது முறையாக ரோஜர் பெடரர் விளையாட உள்ளார்.

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சை வெற்றி பெற்று சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் இறுதிப் போட்டிக்கு நுழைந்தார்.

வெள்ளிக்கிழமை நடைபெர்ற ஆடவர் ஒற்றையர் அரையிறுதி போட்டியில் செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சும், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும் மோதினர்.

இதில் 7 -6, 7-6,6-4 என்ற செட் கணக்கில் பெடரர் வெற்றி பெற்று இறுதி போட்டியில் நுழைந்தார்.

இறுதிப்போட்டியில் குரேஷியாவின் மரின் சிலிக்குடன் பெடரர் மோத உள்ளார்.

சாதனை படைப்பாரா பெடரர்?

முன்னணி வீரர்களான ஆண்டி மூர்ரே, ஜோகோவிச், ரபேல் நடால் ஆகியோர் விம்பிள்டன் போட்டியில் வெளியேறிய நிலையில் 11 வது முறையாக இறுதி போட்டிக்கு பெடரர் முன்னேறியிருக்கிறார்.

இறுதிப் போட்டியில் பெடரர் வெற்றி பெற்றால் 8 முறை விம்பிள்டன் பட்டத்தை பெற்ற வீரர் என்ற சாதனையை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT