2017 - 2018-ம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான எலைட் பிரிவு அம்பயர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் இந்தியாவில் இருந்து சுந்தரம் ரவி மட்டும் இடம்பெற்றுள்ளார்.
இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள மற்ற அம்பயர்களின் பெயர்கள் வருமாறு:
அலீம் தர், குமார் தர்மசேனா, மரைஸ் எராஸ்மஸ், கிரிஸ் கபானே, இயான் குல்ட், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், ரிச்சார்ட் கெட்டில்பொரோ, நிகெல் லாங், புரூஸ் ஓக்சென்போர்ட், பால் ரீபில், ராட் டக்கர்.
இவர்களைத் தவிர போட்டி நடுவர்களாக டேவிட் பூன், கிறிஸ் பிராட், ஜெப் குரோவ், ரஞ்சன் மடுகல்லே, ஆண்டி பைகிராப்ட், ஜவகல் நாத், ரிச்சி ரிச்சட்சன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.