விளையாட்டு

நிதிப்பற்றாக்குறை: சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் ரத்து

எஸ்.தீபக் ராகவ்

கடந்த 21 ஆண்டுகளாக தடையின்றி நடைபெற்று வந்த புகழ்பெற்ற சென்னை ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டித் தொடர் நிதிப்பற்றாக்குறை காரணமாக 2018-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த டென்னிஸ் தொடரை நடத்துவது ஐஎம்ஜி, ஒருங்கிணைப்பது ஐஎம்ஜி-ரிலையன்ஸ்.

இந்நிலையில் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் அறிக்கை ஒன்றில் கூறும்போது, ஐஎம்ஜி ரிலையன்ஸ் 2018 மற்றும் 2019 சென்னை ஓபன் டென்னிஸ் தொடரை நடத்துவதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டது என்று கூறியதோடு, சட்ட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தது.

கடந்த ஜனவரியில் சென்னை ஓபன் டென்னிஸ் 2017 முடிந்த பிறகு தமிழ்நாடு டென்னிஸ் கூட்டமைப்பு, ஏர்செல் இதன் தலைமை ஸ்பான்சர் இல்லை என்று ஐஎம்ஜி-ரிலையன்ஸிடம் தெரிவித்தது.

“சென்னை ஓபன் டென்னிஸ், 2018 தொடருக்கு புதிய தலைமை விளம்பரதாரர்களை அழைக்க வேண்டும் என்று தமிழ்நாடு டென்னிஸ் கூட்டமைப்ப்பு ஐஎம்ஜிஆர் வசம் தெரிவித்தது. தலைமை விளம்பரதாரரை கண்டுபிடித்து விட்டால் மீதி நிதிக்கு தமிழக அரசு மற்றும் உள்ளூர் ஸ்பான்சர்களை அணுகலாம் என்று கூறியிருந்தோம்” என்று தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.

இந்நிலையில் ஐஎம்ஜி-ரிலையன்ஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்துக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.

SCROLL FOR NEXT