விளையாட்டு

பிராந்திய மொழிகளில் சச்சினின் சுயசரிதை

பிடிஐ

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதைக்கு (பிளேயிங் இட் மை வே) பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதைத் தொடர்ந்து, அதை பிராந்திய மொழிகளில் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சச்சின் சுயசரிதை புத்தகத்தின் பதிப்பகமான ஹெசட் இந்தியா நிறுவனத்தின் பதிப்பாளர் பவ்லோமி சாட்டர்ஜி கூறுகையில், “சச்சினின் சுயசரிதை புத்தகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் புத்தகத்தை இந்தியாவில் உள்ள பிராந்திய மொழிகளில் வெளியிடுவதற்காக பல்வேறு பதிப்பகத்தாருடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். மராத்தி, இந்தி, குஜராத்தி, மலையாளம், அசாமி, தெலுங்கு, பெங்காலி மொழிகளில் சச்சின் சுயசரிதையை வெளியிட இணை பதிப்பகங்களை தேடிக்கொண்டிருக்கிறோம்.

அடுத்த சில வாரங்களில் பதிப்பகங்கள் இறுதி செய்யப்பட்டு, அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பிராந்திய மொழிகளில் புத்தகங்கள் வெளியிடப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT