இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான மகேந்திர சிங் தோனி இன்று (வெள்ளிக்கிழமை) தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இதனையடுத்து சமூக வலைதளங்களில் #HappyBirthdayMSD என்ற ஹேஷ்டாக் டிரண்டாகி வருகிறது. பிரபல கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது வாழ்த்தை தோனிக்கு தெரிவித்து வருகின்றனர்.
யுவராஜ்: பிறந்த நாள் வாழ்த்துகள் மிஸ்டர். ஹெலிகாப்டர். இந்த நாள் சிறந்த நாளாக அமையட்டும் நண்பனே. உனக்காக கேக் காத்திருக்கிறது.
முகமத் கைஃப்: பிறந்த நாள் வாழ்த்துகள் தோனி. நீங்கள் செய்த அனைத்துக்கும் நன்றி. வாழ்க்கையில் சிறந்தவற்றை அடைவீர்கள்.
ஷேவாக்: இந்திய ரசிகர்களுக்கு பல மகிழ்ச்சியான தருணங்களை கொடுத்தவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். தொடர்ந்து உங்கள் ஹெலிகாப்டர் பறந்து எங்களது இதயத்தில் வந்திறங்கட்டும்.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அனியின் கேப்டன் மித்தாலி ராஜ்: பிறந்த நாள் வாழ்த்துகள் தோனி. சிறந்த வருடமாக அமைய வாழ்த்துகள்.
விவிஎஸ் லக்ஷ்மன்: பிறந்த நாள் வாழ்த்துகள் தோனி. சிறந்த நாள் மற்றும் பிரமாதமான ஆண்டாக அமைய வாழ்த்துகள்.
ஹர்திக் பாண்டியா: பிறந்த நாள் வாழ்த்துகள் மகி பாய் (சகோதரன்). கேக் தயாராக உள்ளது.
கவுதம் கம்பீர்: பிறந்த நாள் வாழ்த்துகள் தோனி. கடவுள் அசீர்வாதம் கிடைக்கட்டும்.
கிரிக்கெட் வீரர்கள் மட்டுமில்லாது தோனியின் ரசிகர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் என பலரும் தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.