விளையாட்டு

உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வெல்ல வாய்ப்பு: பாட்மிண்டன் நட்சத்திரம் கிடாம்பி ஸ்ரீகாந்த் கருத்து

பிடிஐ

அடுத்த மாதம் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்கள் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி சிறந்த திறனை வெளிப்படுத்தும் பட்சத்தில் பதக்கம் வெல்ல வாய்ப்பு இருப்பதாக நட்சத்திர வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் வரும் ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை உலக சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் தொடர் நடைபெறு கிறது. இந்த தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் விளையாட இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சாய் பிரணீத், அஜெய் ஜெயராம் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஆஸ்தி ரேலிய ஓபன், இந்தோனேஷிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற கிடாம்பி ஸ்ரீகாந்துக்கு, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் நேற்று டெல்லியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட ஸ்ரீகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:

தற்போது பாட்மிண்டனில் நாங்கள் சிறப்பாக விளையாடி வருகிறோம். உலக சாம்பியன்ஷிப் தொடரில் நாங்கள் பதக்கம் வெல் வோம் என்பதை என்னால் உறுதி யாக கூறமுடியாது. பதக்கம் வெல் வதற்கான வாய்ப்பு எங்களுக்கு உள்ளது. போட்டியின் தினத்தில் ஒவ்வொரு ஆட்டத்திலும் 100 சதவீத திறனை வெளிப்படுத்த வேண்டும்.

பெரிய அளவிலான இந்த தொட ருக்கு எல்லாருமே கடினமாக தயா ராவார்கள், அதனால் நாம் தொடர்ச்சியாக சிறப்பாக விளை யாட வேண்டும். தரவரிசையில் 30 முதல் 35 இடங்களுக்குள் உள்ள வீரர்கள் சிறப்பாக விளையாடும் திறனை கொண்டிருப்பார்கள்.

சரியான நேரத்தில் ஆட்டத் திறனில் உச்சம் அடைந்துள்ளேன். கடந்த ஒரு மாதமாக நான் விளை யாடும் விதம் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. உலக சாம்பியன்ஷிப் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்காக அடுத்த சில வாரங்கள் கடின பயிற்சிகள் மேற்கொள்ள விரும்புகிறேன்.

தற்போது கோபி சந்துடன் இந்தோனேஷியாவை சேர்ந்த முல்யோவும் எங்களுக்கு பயிற்சி அளிக்கிறார். முல்யோ உயர்மட்ட அளவில் பயிற்சிகள் அளித்தவர். இருவருடைய உள்ளீடுகளும் எனக்கு பெரிய உதவியாக உள் ளது. இந்திய பாட்மிண்டனை மேம் படுத்தும் பணியை இவர்கள் இரு வரும் மேற்கொண்டுள்ளனர். இது எங்களுக்கு சிறந்த பலனை கொடுக்கும். இவ்வாறு கிடாம்பி ஸ்ரீகாந்த் கூறினார்.

SCROLL FOR NEXT