விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரிக்கு அதிக வாய்ப்பு? நேர்காணலுக்கு 6 பேர் தேர்ந்தெடுப்பு

பிடிஐ

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இயக்குநராக இருந்த ரவி சாஸ்திரி, தலைமைப் பயிற்சியாளர் போட்டியில் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாஸ்திரி, சேவாக், மூடி, சிம்மன்ஸ், பைபஸ் மற்றும் ராஜ்புத் ஆகியோர் நேர்காணல் செய்யப்படவுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

10 பேரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன: சாஸ்திரி, சேவாக், மூடி, பைபஸ், டொட்டா கணேஷ், ராஜ்புத், குளூஸ்னர், ராகேஷ் சர்மா, பில் சிம்மன்ஸ், உபேந்திர பிரம்மச்சாரி (கோலியை வழிக்குக் கொண்டு வருவேன் என்று குறிப்பிட்ட பொறியாளர்)

இந்த 10 பேரில் 6 பேரை சச்சின், கங்குலி, லஷ்மண் குழு நேர்காணல் செய்யும் என்று தெரிகிறது.

இந்நிலையில் விராட் கோலிக்கு நெருக்கமான ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

இவருக்கு கடும் போட்டியாளராக சேவாக் இருக்கலாம். ஆனால் சேவாகுக்கு பயிற்சியாளராக அனுபவம் போதாது என்று கருதப்படுகிறது.

உள்நாட்டு பயிற்சியாளரான அனில் கும்ப்ளேவுக்கே கேப்டன் விராட் கோலி தன் அதிகாரத்தைக் காட்டியதால், அயல்நாட்டுப் பயிற்சியாளர் மூலம் மேலும் தர்மசங்கடமே ஏற்படலாம் என்பதால் ஒரு விதத்தில் ‘சாணக்கியர்’ என்று கருதப்படும் ரவி சாஸ்திரிக்கே வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.

SCROLL FOR NEXT