விளையாட்டு

சவுரவ் கங்குலி பிறந்த நாள்: மம்தா பானர்ஜி, சச்சின், சேவக் வாழ்த்து

பிடிஐ

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங் குலி, நேற்று தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதை முன்னிட்டு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முன்னாள் கிரிக் கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவக் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சவுரவ் கங்குலியின் பிறந்த நாளை முன்னிட்டு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அவருக்கு ட்விட்டர் தளத்தில் வாழ்த்து தெரிவித்தார். முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின், தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “உங்க ளுடன் கிரிக்கெட் விளையாடுவது எப்போதும் இன்பமான அனுபவ மாக இருந்துள்ளது. உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த் துகள்” என்று கூறியுள்ளார்.

வீரேந்தர் சேவக் வெளி யிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இந்தியாவின் கொடி உயரமாக பறக்க எப்போதும் உதவியாக இருக்க வேண்டும். டெஸ்ட் கிரிக் கெட் போட்டிகளில் என் வெற்றி களுக்கு உங்கள் ஒத்துழைப்பே காரணம்” என்று கூறியுள்ளார்.

ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “நீங்கள் எப்போதுமே எனக்கு உந்து சக்தியாக இருந்துள்ளீர்கள். உங் களுக்கு என் பிறந்தநாள் வாழ்த் துகள்” என்று கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆகியவையும் சவுரவ் கங்குலிக்கு வாழ்த்து தெரிவித் துள்ளன.

SCROLL FOR NEXT