விளையாட்டு

இறுதிப் போட்டியில் முகுருசா, வீனஸ் வில்லியம்ஸ்

செய்திப்பிரிவு

விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு ஸ்பெயினின் கார்பைன் முகுருசா, அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் முன்னேறினர்.

மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் 14-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கார்பைன் முகுருசா, 87-ம் நிலை வீராங்கனையான சுலோவேக்கியாவின் மெக்டலினா ரைபரிகோவாவை எதிர்த்து விளையாடினார். சுமார் ஒரு மணி நேரம் 5 மிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முகுருசா 6-1, 6-1 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்றார்.

விம்பிள்டனில் முகுருசா இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இது 2-வது மு றையாகும். 23 வயதான அவர், கடந்த 2015-ம் ஆண்டும் இறுதிப் போட்டியில் விளையாடியிருந்தார். தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் 1990-ம் ஆண்டுக்கு பிறகு விம்பிள்டன் இறுதிப் போட்டியில் கால் பதிக்கும் முதல் ஸ்பெயின் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். கடைசியாக அந்த நாட்டை சேர்ந்த அரான்ட்சா சான்செஸ் விகாரியோ இறுதிப் போட்டியில் விளையாடியிருந்தார்.

மற்றொரு அரை இறுதியில் 6-ம் நிலை வீராங்கனையான இங்கிலாந்தின் ஜோகன்னா ஹோன்டா, 5 முறை சாம்பியனும் 10-ம் நிலை வீராங்கனையுமான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்சை எதிர்கொண்டார். இதில் வீனஸ் வில்லியம்ஸ் 6-4, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இறுதிப் போட்டியில் முகுருசா-வீனஸ் வில்லியம்ஸ் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

SCROLL FOR NEXT