மே.இ.தீவுகளுக்கு எதிராக 3-1 என்று தொடரை வென்ற இந்திய அணி மே.இ.தீவுகள் மண்ணில் 3-வது முறையாக தொடர்ச்சியாக ஒருநாள் தொடரை வென்றுள்ளது.
2009-ம் ஆண்டில் 2-1 என்றும் 2011-ல் 3-2 என்றும் இந்திய அணி தொடரை வென்றுள்ளது.
2007-ம் ஆண்டிலிருந்து உள்நாட்டிலும் மே.இ.தீவுகளிலும் இந்திய அணி 7 ஒருநாள் தொடர்களை தொடர்ச்சியாக வென்றுள்ளது.
8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி நேற்று வெற்றி பெற்றது கிங்ஸ்டன் மைதானத்தில் இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றியாகும்.
ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி கேப்டனாக வெற்றி பெற்ற விகிதம் 75.86% ஆகும். விராட் கோலி தலைமையில் இந்திய அணி 22 போட்டிகளில் வென்று 7-ல் தோற்றுள்ளது.
ஜேசன் ஹோல்டர் 5 போட்டிகளிலும் டாஸ் வென்றதன் மூலம் அனைத்து டாஸ்களையும் வென்ற 2-வது மே.இ.தீவுகள் கேப்டனாகிறார். ரிச்சி ரிச்சர்ட்சன் இதற்கு முன்பாக இந்தியாவில் 1993-94-ல் நேரு கோப்பை ஒருநாள் தொடரில் இதே அளவுக்கு டாஸில் வென்ற மே.இ. கேப்டனாவார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் 6-வது முறையாகவும், மேற்கிந்திய அணிக்கு எதிராக 3 முறையும் மொகமது ஷமி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
கிங்ஸ்டனில் 4வது சதம் எடுத்த விராட் கோலி, சச்சின் சாதனையை சமன் செய்தார்.
மே.இ.தீவுகளுக்கு எதிராக 27 போட்டிகளில் 1387 ரன்களுடன் 60 ரன்கள் பக்கம் சராசரி வைத்துள்ள ஒரே பேட்ஸ்மெனாக திகழ்கிறார் விராட் கோலி.
விராட் கோலி நேற்று 23வது ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.
தனது 28 சதங்களில் 18 சதங்களை விரட்டும் போது அடித்து விராட் கோலி புதிய சாதனையைப் படைத்தார். சச்சின் டெண்டுல்கர் 17 சதங்களை அடித்துள்ளார்.
இதில் அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்த சதங்கள் வகையில் விராட் கோலி 24, சச்சின் 33, பாண்டிங் 25 சதங்களை அடித்துள்ளனர்.
தினேஷ் கார்த்திக் அரைசதம் அடித்த 8 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.