பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அமித் குமார் சரோஹா வெள்ளி பதக்கம் வென்றார்.
லண்டனில் நடைபெற்று வரும் பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் திங்கட்கிழமை நடைபெற்ற கிளப் த்ரோ போட்டியில் இந்தியாவின் அமித் குமார் பங்கேற்றார்.
இதில் அமித் குமார் தன்னுடைய மூன்றாவது வாய்ப்பில் 30.25 மீட்டர் தூரம் வீசி வெள்ளி பதக்கத்தை தனதாக்கினார்.
இந்த வெள்ளி பதக்கத்தை வென்றதன் மூலம் ஆசிய சாதனையையும் அமித் குமார் பதிவு செய்தார்.
இந்தப் போட்டி பிரிவில் செர்பியாவின் ஜெல்கோ 31.9 மீட்டர் தூரன் வீசி தங்க பதக்கத்தை தட்டிச் சென்றார்.
இதே பிரிவில் விளையாடிய மற்றொரு இந்தியரான தரம்பிருக்கு 10வது இடம் கிடைத்தது.