தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் 30-வது ரேச்சல் பரஞ்ஜோதி மகளிர் செஸ் போட்டிசென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நேற்று தொடங்கியது.
தொடக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் நிர்மலா தலைமை தாங்கினார். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பொது மேலாளர் (தென் பிராந்தியம்) பாண்டியன் போட்டிகளை தொடங்கி வைத்தார்.
போட்டி தினமும் காலை 9 மணிக்கு ஆரம்பித்து மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. நாளை நிறைவடைகிறது. இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.20 ஆயிரம். சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு ரூ. 5 ஆயிரமும், கோப்பையும் வழங்கப்படும்.