இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது.
இங்கிலாந்தின் ப்ரிமிங்கம் நகரில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. களம், ரன் சேர்ப்புக்கு சாதகமாக இருப்பதால், இரண்டாவதாக ஆடினாலும் ரன் சேர்ப்பதில் பிரச்சினை இருக்காது. அதனால் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது.
இந்திய அணியைப் பொருத்தவரை அனைவரும் சிறப்பாக பந்துவீசுவதால் யாரை அணியில் சேர்ப்பது என குழப்பமாக இருப்பதாகக் கேப்டன் கோலி தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்றைய ஆட்டத்துக்கு பும்ரா, புவனேஸ்வர், உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முகமது ஷமி, அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
விராட் கோலிக்கும் பயிற்சியாளர் கும்ப்ளேவுக்கும் இடையே கருத்து வெறுபாடு நிலவுவதாக செய்திகள் வந்திருக்கும் சூழலில், ராமச்சந்திர குஹாவின் ராஜினாமாவும், அதற்கான காரணங்களும் இந்திய கிரிக்கெட் வாரியத்தை புரட்டிப் போட்டுள்ளன. இந்நிலையில் இந்த ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.