விளையாட்டு

பயஸ் - பூபதி மோதல் விவகாரம்: டென்னிஸ் கூட்டமைப்பு வேண்டுகோள்

பிடிஐ

லியாண்டர் பயஸும், மகேஷ் பூபதியும் முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று இந்திய டென்னிஸ் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஒரு காலத்தில் இரட்டையர் டென்னிஸில் இந்தியாவுக்கு பல வெற்றிகளை தேடித் தந்த லியாண்டர் பயஸும், மகேஷ் பூபதியும் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். இந்நிலையில் டேவிஸ் கோப்பை போட்டியில் ஆடும் இந்திய அணியின் கேப்டனாக மகேஷ் பூபதி நியமிக்கப்பட்டார். கேப்டனாக பொறுப்பேற்ற அவர், உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக ஆடும் இந்திய அணியில் இருந்து லியாண்டர் பயஸை நீக்கினார்.

இது டென்னிஸ் உலகில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தான் வேண்டுமென்றே பழிவாங்கப்படுவதாக பயஸ் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக பயஸ் - பூபதி இடையே வார்த்தை போர் வெடித்தது. முன்னாள் வீரர்கள் பலரும் இரு தரப்புக்கு ஆதரவாகவும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அகில இந்திய டென்னிஸ் கூட்டமைப்பின் செயலாளரான ஜெனரல் ஹிரோன்மோய் இதுபற்றி செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “மூத்த வீரர்களான லியாண்டர் பயஸும், மகேஷ் பூபதியும் முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். இருவருக் கிடையேயான மோதலை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. அணியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக லியாண்டர் பயஸ் பகிரங்கமாக கருத்துகளை தெரி வித்திருக்க கூடாது என்று நான் கருதுகிறேன்” என்றார்.

SCROLL FOR NEXT