விளையாட்டு

மருமகன் மீது குற்றச்சாட்டு இருக்கும் போது சீனிவாசன் தேர்தலில் போட்டியிடலாமா? - உச்ச நீதிமன்றம்

கிருஷ்ணதாஸ் ராஜகோபால்

ஐபில் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக மருமகன் குருநாத் மெய்யப்பன் மீது குற்றாம்சாட்டப்பட்டிருக்கும் போது உறவினரான சீனிவாசன் பிசிசிஐ தேர்தலில் போட்டியிட முடியுமா? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் சுதாட்டத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி முத்கல் கமிட்டியின் இறுதி அறிக்கை மீதான விசாரணையின் போது உறவினர் மீது குற்றச்சாட்டு இருக்கும் போது கிரிக்கெட் வாரியத் தேர்தல்களில் சீனிவாசன் போட்டியிட முடியுமா என்று கேள்வி எழுப்புயுள்ளனர்.

நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர் மற்றும் மொகமது இப்ராஹிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ”நெருக்கமான உறவினர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் போது, பிசிசிஐ தேர்தல்களில் சீனிவாசன் போட்டியிட முடியுமா? இந்த விஷயத்தில் அவருக்கும் இந்தக் குற்றச்சாட்டுக்கும் தொடர்பில்லை என்ற ஒரு விஷயம் தேர்தலில் போட்டியிட போதுமானதா?” என்று கேள்வி எழுப்பினர்.

2014, மே மாதம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராக சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தைப் பொறுத்த வரை மேல்விசாரணைத் தேவைப்பட்டது.

முத்கல் கமிட்டி அறிக்கை முழுதையும் இன்னும் படிக்கவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்ததையடுத்து மூத்த வழக்கறிஞர் அர்யமா சுந்தரம் இந்த வழக்கின் அவசர நிலை பற்றி நீதிபதிகளிடம் தெரிவித்தனர்.

ஆனாலும் நீதிபதிகள் இந்தக் கேள்வியை முன்வைத்தனர்: "முத்கல் கமிட்டி விசாரணை அறிக்கையில் சீனிவாசன் மீது எந்த வித தவறும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் அவருக்கு நெருங்கிய உறவினர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் அவர் தேர்தலில் போட்டியிடுவது முறையாகுமா?” என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு வழக்கறிஞர் கபில் சிபல், “யார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதோ அவர்தான் சட்டத்தின் விளைவுகளை சந்திக்க வேண்டுமே தவிர, உறவினர் என்பதற்காக நிரபராதியான ஒருவர் விளைவுகளுக்கு ஆளாக முடியாது” என்றார்.

SCROLL FOR NEXT