விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன்: பைனலுக்கு முன்னேறினார் ஸ்ரீகாந்த்

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டிக்கு இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் முன்னேறினார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் சீன வீரர் யுகி ஷி-யை 21-10 21-14 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார். 27 நிமிடங்களில் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார்.

தொடர்ந்து மூன்றாவது முறையாக ஸ்ரீகாந்த் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக சிங்கப்பூர் ஓபன், இந்தோனேசியா ஒபன் இறுதிப் போட்டிகளில் ஸ்ரீகாந்த் விளையாடியிருக்கிறார். இதில் இந்தோனேசிய ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்.

இறுதிப் போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. சீனாவில் சென் லாங், கொரியாவின் லீ ஹுயுன் 2 ஆகியோர் அரையிறுதியில் மோதுகின்றனர். இவர்களில் வெற்றிபெறும் வீரரை ஸ்ரீகாந்த் இறுதிப் போட்டியில் எதிர்கொள்வார்.

SCROLL FOR NEXT