விளையாட்டு

தென்மண்டல கால்பந்து கண்ணூர் அணி வெற்றி

செய்திப்பிரிவு

தென்மண்டல அளவில் பல்கலைக் கழகங்களுக்கு இடையே, பெண்களுக்கான கால் பந்து போட்டிகள் சென்னையை அடுத்துள்ள மேலக்கொண்டை யூரில் நேற்று தொடங்கியது. இப்போட்டிக்கு தமிழ்நாடு உடற் கல்வியியல் மற்றும் விளை யாட்டுப் பல்கலைக்கழகம் ஏற் பாடு செய்துள்ளது.

அழகப்பா பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு ஆணையர் முனைவர் க.பவுன் ராதா போட்டியை தொடங்கி வைத்தார்.

தென்மண்டலங்களில் உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 26 அணிகள் இதில் பங்கேற்கின்றன. இப்போட்டிகள் வரும் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளன. நேற்று நடந்த முதல் போட்டியில் விருதுநகரைச் சேர்ந்த கலச லிங்கம் பல்கலைக்கழகமும், கேரள மாநிலத்தைச் சேர்ந்த கண்ணூர் பல்கலைக்கழகமும் மோதின. இதில் கண்ணூர் பல்கலைக்கழக அணி 8-0 என்ற கோல்கணக்கில் அபாரமாக வெற்றிபெற்றது.

SCROLL FOR NEXT