விளையாட்டு

பாண்டிங், சச்சின், திராவிட் உள்ள வெட்டோரியின் சிறந்த அணிக்கு விராட் கோலி கேப்டன்

இரா.முத்துக்குமார்

நியூஸிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் ஸ்பின்னருமான டேனியல் வெட்டோரி தனது சிறந்த உலக கிரிக்கெட் அணியைத் தேர்வு செய்துள்ளார்.

இந்த அணியில் திராவிட், சச்சின், பாண்டிங், கில்கிறிஸ்ட், வார்ன் ஆகிய பெருந்தலைகள் இருந்தும் விராட் கோலியை கேப்டனாக நியமித்துள்ளார் வெட்டோரி.

ஆனால் இந்த அணியில் பிரையன் லாரா இடம்பெறவில்லை, சங்கக்காரா தேர்வு செய்யப்பட்டுள்ளது பற்றி வெட்டோரி ஒன்றும் குறிப்பிடவில்லை.

ஆனால் விராட் கோலியை ஏன் கேப்டனாகத் தேர்வு செய்தார் என்பதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார், “விராட் கோலியை கண்ணுக்கு முன்னால் பார்த்திருக்கிறேன். நெருக்கமாக அவரது வழிமுறைகளை அவதானித்திருக்கிறேன். அவரது வழிமுறைகளில் நான் மிகவும் கவரப்பட்டுள்ளேன். அவரது ஆளுமை அணிமுழுதும் விரவும். இந்த அணி எப்படியும் வெல்லும், ஆனாலும் விராட் கோலிக்கே கேப்டன்சியைப் பொறுத்தவரை முதலிடம்” என்றார்.

பாண்டிங், திராவிட் தொடக்க வீரர்கள் என்று கூறும் வெட்டோரி, மிடில் ஆர்டரில் கோலி, டிவில்லியர்ஸ், டெண்டுல்கர், சங்கக்காரா, கில்கிறிஸ்ட் ஆகியோர் அதிரடிக்கு உதவுவார்கள்.

அதே போல் வேகப்பந்து வீச்சிற்கு ரிச்சர்ட் ஹேட்லி, கிளென் மெக்ரா ஆகியோரை சேர்த்துள்ளார் வெட்டோரி, ஸ்பின்னிற்கு முரளிதரன், வார்ன் ஆகியோர் இடம்பெற ஜாக் காலிஸுக்கு 12-வது வீரர் இடமே கொடுத்துள்ளார் வெட்டோரி.

டேனியல் வெட்டோரியின் அனைத்து கால சிறந்த அணி வருமாறு:

ரிக்கி பாண்டிங், ராகுல் திராவிட், விராட் கோலி (கேப்டன்), டிவில்லியர்ஸ், சச்சின், சங்கக்காரா, ஆடம் கில்கிறிஸ்ட், ஷேன் வார்ன், முரளிதரன், மெக்ரா, சர் ரிச்சர்ட் ஹேட்லி மற்றும் ஜாக் காலிஸ் (12-வது வீரர்)

SCROLL FOR NEXT