விளையாட்டு

உச்ச நீதிமன்ற அதிரடி தீர்ப்பு: கிரிக்கெட் சங்கத்தினர் என்ன சொல்கிறார்கள்?

செய்திப்பிரிவு

தீர்ப்பை மதிக்கிறேன்

உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து அனுராக் தாக்கூர் கூறும்போது, நீதிமன்றத்தின் தீர்ப்பானது எனக்கும் நான் மட்டும் தொடர் புடைய தனிப்பட்ட விஷயம் அல்ல. உச்ச நீதிமன்றத்துக்கும் பிசிசிஐ- யின் தன்னாட்சிக்கும் இடையி லான போராட்டம் ஆகும். நீதி மன்றத்தின் தீர்ப்பை நான் மதிக் கிறேன். அது அனைத்து குடிமக்க ளின் கடமை. பிசிசிஐ நிர்வாகிக ளாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் இருந்தால் கூடுதல் நன்மை என உச்ச நீதிமன்றம் நினைத்தால் அவர்களுக்கு எனது வாழ்த்துக் களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களது வழிகாட்டுதலில் இந்திய கிரிக்கெட் அணி சிறப் பாகவே செயல்படும் என்று உறுதி யாக நம்புகிறேன்’’ என்றார்.

என்ன சொல்கிறது டிஎன்சிஏ

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க (டிஎன்சிஏ) செயலாளர் காசி விஸ்வாதன் கூறும்போது, "உச்ச நீதிமன்றம் என்ன உத்தரவிட்டுள் ளதோ அதன்படி நாங்கள் செயல் படுவோம். இல்லை யென்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை யாகிவிடும். விரைவில் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்துவோம்" என்றார்.

அசத்தும் ஆந்திரா

பிசிசிஐ துணைத் தலைவர் களின் சீனியர்களில் ஒருவரும் ஆந்திர கிரிக்கெட் சங்க தலைவரு மான கோகராஜூ கங்கா ராஜூ கூறும்போது,

‘‘உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்தவித குழப்பமும் இல்லை. ஆந்திர கிரிக்கெட் சங்க தலைவர் என்ற முறையில், லோதா குழுவின் சீர்திருத்தங்களை முழுவதுமாக உடனடியாக நாங்கள் அமல்படுத்துகிறோம். இந்திய கிரிக்கெட் ஆனது இதில் இருந்து நகர்ந்து முன்னேறி செல்ல வேண்டும்’’ என்றார்.

இடைக்கால தலைவர் யார்?

புதிய நிர்வாகிகள் தேர்வாகும் வரை இந்திய கிரிக்கெட் வாரியத் தில் துணைத் தலைவர்களாக உள்ள சீனியர் ஒருவர் பிசிசிஐ-யின் இடைக்கால தலைவராக இருப்பார் என உச்ச நீமன்றம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக துணைத் தலை வர்களில் சீனியராக கருதப்படும் கோகராஜூ கங்கா ராஜூ கூறும்போது,

‘‘இந்த விஷயத்தில் தெளிவை பெற விரும்புகிறேன். டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் உள்ள சி.கே.கண்ணாவும் சீனியர் துணைத்தலைவர்தான். தற்காலிக பதவி என்றாலும் இந்த காலக்கட்டமும் தலைவராக இருந்ததாகவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் என்னை நம்பி பொறுப்புகளை வழங்கும் பட்சத்தில் நேர்மையாக கடமையாற்றுவேன்’’ என்றார்.

SCROLL FOR NEXT