விளையாட்டு

ஆஷஸ்: 136 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து

செய்திப்பிரிவு

ஆஷஸ் தொடரின் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸ்சில், இங்கிலாந்து அணி 136 ரன்களில் சுருண்டது.

ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் மிச்சேல் ஜான்சன், ரியான் ஹாரிஸ் ஆகியோரது பந்துவீச்சில் இங்கிலாந்தின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.

இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் குக் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். ட்ராட் 10 ரன்களிலும், பீட்டர்சன் 18 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். கார்பெர்ரி மிகவும் நிதானமாக பேட் செய்து 40 ரன்கள் சேர்த்தார்.

அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக, பிராட் 32 ரன்கள் எடுத்தார். ஏனையோர் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலான ரன்களிலேயே ஆட்டமிழந்தனர்.

இறுதியில், இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸ்சில், 52.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இங்கிலாந்து தரப்பில் ஜான்சன் 4 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் 3 விக்கெட்டுகளையும், லியோன் 2 விக்கெட்டுகளையும், சிடில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

முன்னதாக, ஆட்டத்தின் இரண்டாவது நாளான இன்று, ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸ்சில், 97.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 295 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக, ஹிடின் 94 ரன்களையும், ஜான்சன் 64 ரன்களையும், வார்னர் 49 ரன்களையும் எடுத்தனர்.

SCROLL FOR NEXT