விளையாட்டு

1956 மெல்போர்ன் ஒலிம்பிக்: சோவியத் யூனியன் ஆதிக்கம்

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியாவின் மெல் போர்ன் நகரில் 16-வது ஒலிம்பிக் போட்டி 1956-ம் ஆண்டு நவம்பர் 22 முதல் டிசம்பர் 8 வரை நடைபெற்றது. இப்போட்டியில் 72 நாடுகளைச் சேர்ந்த 2,938 வீரர்கள், 376 வீராங் கனைகள் உட்பட 3,314 பேர் பங்கேற்றனர். 17 விளையாட்டு களில் 145 பிரிவுகளில் போட்டி கள் நடத்தப்பட்டன.

சோவியத் யூனியன் 37 தங்கம், 29 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 98 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. அமெ ரிக்கா 32 தங்கம், 25 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 74 பதக்கங்களுடன் 2-வது இடத் தையும், ஆஸ்திரேலியா 13 தங் கம், 8 வெள்ளி, 14 வெண்கலம் என 35 பதக்கங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தன.

ஆஸ்திரேலிய தடகள வீராங் கனை பெட்டி குத்பெர்ட் 3 தங்கப் பதக்கங்களை வென்றார். பெட் டியின் சாதனையை அங்கீகரிக் கும் வகையில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தின் அருகே அவருக்கு சிலை அமைத்து கவுரவப்படுத்தியது ஆஸ்திரேலியா.

இந்தியாவுக்கு 6-வது தங்கம்

இந்தியாவின் சார்பில் 59 பேர் களமிறக்கப்பட்டனர். ஆனால் ஹாக்கிப் போட்டியில் மட்டுமே இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்தது. தொடர்ந்து 6-வது முறையாக தங்கம் வென்று சாதனை படைத்தது இந்திய அணி. இறுதிப் போட்டியில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

ஒலிம்பிக்கில் சோவியத் யூனியன், ஹங்கேரி வீரர்கள் இடையே பதற்றம் நிலவியது. வாட்டர் போலோ போட்டியில் ஹங்கேரியின் பயிற்சி முறை மற்றும் உத்திகளை சோவியத் யூனியன் காப்பியடிக்க முயன்ற தால் இவ்விரு அணிகள் இடை யிலான மோதல் அதிகரித்தது. அதன் உச்சக்கட்டமாக சோவியத் யூனியன்-ஹங்கேரி இடையிலான அரையிறுதி ஆட்டத்தின்போது மோதல் வெடித்தது.

அந்த ஆட்டத்தில் ஹங்கேரி அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதால் ஆத்திர மடைந்த சோவியத் யூனியன் வீரர் வாலன்டின் பிரோகோ போவ், ஹங்கேரியின் இர்வின் ஸடோரின் முகத்தில் குத்தினார். இதனால் அவருடைய கண்ணின் கீழ் பகுதியில் இருந்து ரத்தம் வழிந்தது. கடைசி 2 நிமிடங்கள் ரத்தம் வழிய இலக்கை கடந்தார் இர்வின். இறுதியில் ஹங்கேரி 4-0 என்ற கணக்கில் சோவியத் யூனியனை வீழ்த்தியது.

SCROLL FOR NEXT