இந்தியாவில் 41 இடங்களில் படைக்கலத் தொழிற்சாலைகள் (ஓ.எஃப்.டி.) செயல்பட்டு வருகின்றன. இவை கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, மத்திய என 5 மண்டலங்களாக பிரிக்கப்பட் டுள்ளன. இந்த மண்டலங்களுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி திருச்சியிலுள்ள படைக் கலத் (துப்பாக்கி) தொழிற்சாலை வளாகத்தில் நேற்று தொடங்கியது.
படைக்கலத் தொழிற்சாலை வாரியத் தலைவர் வி.பி.யஜுர்வேதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டிகளைத் தொடங்கி வைத்தார். திருச்சி படைக்கலத் தொழிற்சாலை பொது மேலாளர் கே.அப்பாராவ், கூடுதல் பொது மேலாளர் கோபி, விளையாட்டு அலுவலர் ராஜன், திருச்சி கனரக உலோக ஊடுருவி தொழிற்சாலை (எச்ஏபிபி) பொதுமேலாளர் சின்ஹா உள்ளிட்டோர் வீரர்களை வாழ்த்தினர்.
அதன்பின் நடைபெற்ற முதல் ஆட்டத்தில், தெற்கு மண்டல அணி 29-11 என்ற புள்ளிக் கணக்கில் கிழக்கு மண்டல அணியை வென்றது. இதில் அதிகபட்சமாக தெற்கு மண்டல அணி வீரர் உன்னி கிருஷ்ணன் 10 புள்ளிகளும், கிழக்கு மண்டல அணி வீரர் கிஷோர்குமார் ஜவா 8 புள்ளிகளும் எடுத்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் மத்திய மண்டல அணி 44-21 என்ற புள்ளிக் கணக்கில் வடக்கு மண்டல அணியை வென்றது. இப்போட்டி யில் மத்திய மண்டல அணி வீரர் மகேந்திரசிங், வடக்கு மண்டல அணி வீரர் ராஜன் திவாரி ஆகியோர் தலா 10 புள்ளிகள் பெற்றனர். போட்டிகள் இன்றும், நாளையும் தொடர்ந்து நடைபெற உள்ளன.